வார சந்தையில் 12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

73பார்த்தது
வார சந்தையில் 12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலத்தில், திங்கட்கிழமை நாட்களில் மாவட்ட அளவிலான பிரசித்தி பெற்ற தேங்காய் வாரச் சந்தை நேற்று (செப்.,30) நடைபெற்றது.

சந்தைக்கு கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்டு வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தேங்காய் அளவைப் பொறுத்து 8 ரூபாய் முதல் 16 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று (செப்.,30) ஒரே நாளில் மொத்தம் 12 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த சந்தையில் தேங்காய் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்தது. வரும் நாட்களில் தேங்காய் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி