கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் திருவட்டத்துரை சிவன் ஆலயத்தில் 1000 லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர்த் தொட்டி அமைத்து லயன்ஸ் சங்கத் தலைவர் சக்திவேல் தலைமையில் நிருவாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் சீனு, பழமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர்கள் து. அருள்முருகன், ஆனந்தன், விருத்தாசலம் லயன்ஸ் சங்கம் மணிகண்ட ராசன். வட்டாரத் தலைவர் கு. மேழிச்செல்வன், இயக்குநர் பாஸ்கர், அர்ச்சகர் விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.