திட்டக்குடி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

85பார்த்தது
திட்டக்குடி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மெயின் ரோடு தர்மகுடிகாட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (19 ஆம் தேதி) காலை 11 மணி முதல் 1 வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. திட்டக்குடி, பெண்ணாடம், தொழுதுார், வேப்பூர் உபகோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் கூறி நிவர்த்தி பெறலாம் என திட்டக்குடி கோட்ட மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி