தமிழக காவல்துறை மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி 26. 09. 2024 முதல் 28. 09. 2024 வரை சென்னை கமாண்டோ பள்ளி சார்பில் ஒத்திவாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 300 யாட்ஸ் Insas துப்பாக்கி சுடும் போட்டியில் நெய்வேலி நகர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ராஜேஸ்வரி 2 வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற பெண் தலைமை காவலர் ராஜேஸ்வரியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.