கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முத்தாண்டிகுப்பத்தில் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடையை அமைக்கும் பணியை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.