அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று (அக் 8) கடலூர் கிழக்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.
இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் முருகுமாறன் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.