கடலூர்: 683 ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

83பார்த்தது
கடலூர்: 683 ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி வருகிற 2 ஆம் தேதி (புதன்கிழமை) கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராம ஊராட்சிக ளிலும் காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும்.

இந்த கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டு களில் சுழற்சி முறையை பின்பற்றியும், மதசார்புள்ள எந்த வொருவளாகத்திலும் நடத்தாமல் பொதுவான இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் நடத்திட வேண்டும். மேலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே ஊராட்சி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி ஊராட்சிமன்ற தலைவர்கள் நடத்திட வேண்டும்.

இக்கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய் மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித் தும், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக் கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. எனவே கிராமபொதுமக்கள் மேற்படி கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி