விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது ஒழிப்பு மாநாட்டு தீர்மான புத்தகங்களை இன்று கடலூரில் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் நிகழ்ச்சி கடலூர் போஸ்ட் ஆபீஸ் ஆட்டோ சங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன், கடலூர் மாநகர மாவட்ட செயலாளர் செந்தில், கடலூர் நகர செயலாளர்கள் செங்கதிர், ராஜதுரை ஆகியோர் புத்தகங்களை விநியோகம் செய்தனர். பொதுமக்களுக்கு மதுவினால் ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அனைவரும் புத்தகங்களை மிகவும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். கடலூர் போஸ்ட் ஆபீஸ் வெற்றி விநாயகர் ஆட்டோ சங்க நிர்வாகிகளுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மது ஒழிப்பு மாநாட்டு தீர்மான புத்தகங்கள் வழங்கப்பட்டன. உடன் கிருஷ்ணமூர்த்தி, சுந்தர், அப்பு, கணேஷ், நாராயணன், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.