சிதம்பரம்: அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

75பார்த்தது
சிதம்பரம்: அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து அ. தி. மு. க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் படி கடலூர் கிழக்கு மாவட்டத்தில் சிதம்பரம் நகராட்சி, பரங்கிப்பேட்டை, கிள்ளை, அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோயில் மற்றும் ஸ்ரீ முஷ்ணம் பேரூராட்சிகளில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள்-வீராங்கனைகள், வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி