
பரங்கிப்பேட்டை: தொடங்கிய பூப்பந்தாட்ட போட்டி
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் BMD பூப்பந்தாட்ட கழகத்தின் 68 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஒன் சீனியர் பூப்பந்தாட்ட போட்டி பரங்கிப்பேட்டை BMD பூப்பந்தாட்ட கழகத்தில் நேற்று (ஜூலை 26) தொடங்கியது. இப்போட்டியில் தமிழ்நாட்டின் தலைசிறந்த 18 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.