மருதூர்: விவசாயி மன உளச்சலில் தற்கொலை

55பார்த்தது
மருதூர்: விவசாயி மன உளச்சலில் தற்கொலை
கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த பு. கொளக்குடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த விவசாயி ராஜா. இவர் வயிற்று வலி பிரச்னையால் மன உளச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை பு. கொளக்குடி ஜெயங்கொண்டான் வாய்க்கால் அருகில் உள்ள களத்துமேட்டில் மயங்கி கிடந்தார்.

தகவலறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மருதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி