வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!

74பார்த்தது
வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!
கோவை மாவட்டத்தில் சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் வடவள்ளி அருகே உள்ள ஓணப்பாளையத்தில் ஒரு வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓணப்பாளையத்தைச் சேர்ந்த ஷயாம் சுந்தர் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த சிறுத்தை, அங்கு வளர்க்கப்பட்டு வந்த நாயை கடித்து இழுத்துச் சென்றது.

இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக, கோவை தொண்டாமுத்தூர், வண்டிக்காரனூர், விராலியூர், மருதமலை மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி சென்றன.

இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். தற்போது மீண்டும் சிறுத்தை தாக்குதல் நிகழ்ந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி