கோவையில் அய்யர்பாடி, காடுவெட்டிபாளையம் பகுதிகளில் இன்று(செப்.30) மின்தடை இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அய்யர்பாடி துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.
அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, ஹைபாரஸ்ட், சோலையாறு நகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி ஆகிய பகுதிகளிலும், அதேபோல காடுவெட்டிபாளையம் துணை மின் நிலைய பகுதிகளான காடுவெட்டிபாளையம், என். ஜி. பாளையம், மோளகாளிபாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துக்கவுண்டன்புதூர் (ஒரு பகுதி) மற்றும் வலையபாளையம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
பொதுமக்கள் இந்த மின்தடை அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்களது அன்றாட பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.