பருத்தி சாகுபடி மேற்கொள்ள மானியத்தில் இடுபொருட்கள்

70பார்த்தது
பருத்தி சாகுபடி மேற்கொள்ள மானியத்தில் இடுபொருட்கள்
கிணத்துக்கடவு வட்டார பருத்தி சாகுபடி விவசாயிகள் மானியத்தில் இடுபொருட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் துறையில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பாண்டு, லாபகரமான பருத்தி சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அவ்வகையில், கிணத்துக்கடவு வட்டாரத்தில், விவசாயிகள் பலர், பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டிம் வருகின்றனர். விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், பருத்தி நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் காய் புழுவினை கட்டுப்படுத்த தேவையான உயிர் உயிரியல் காரணிகள் அனைத்தும் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ட்ரோன் வாயிலாக மருந்து தெளிக்க ஒரு ஹெக்டேருக்கு 1, 250 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இதற்காக கிணத்துக்கடவு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் தேவையான அளவு உயிர் உரங்கள், பருத்தி நுண்ணுாட்டச் சத்துக்கள், உயிரியல் காரணிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இடுபொருட்களை மானியத்தில் பெறுவதற்கு கூகுள்பே, பேடிஎம், போன்பே வாயிலாக பணம் செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி