சரவணம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

69பார்த்தது
சரவணம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை
கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (டிசம்பர் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர் மற்றும் ஜெயப்பிரகாஷ் நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி