கவுண்டம்பாளையம்: ஆணையர், ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை மனு

84பார்த்தது
கவுண்டம்பாளையம்: ஆணையர், ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை மனு
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக PRG. அருண்குமார் உள்ளார். இவர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து, தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். 

மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும், மழைநீர் வடிகால் அமைக்கவும், ஆதிதிராவிடர் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்து தரவும் கோரிக்கை வைத்தார். அதேபோல் மாநகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவில், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள மயானங்களை சீரமைக்கவும், மழைநீர் வடிகால் அமைக்கவும் கோரிக்கை வைத்தார்.

தொடர்புடைய செய்தி