கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்று இரவு ஒரு இருசக்கர வாகனம் திருடு போயிருப்பது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. K. k பிரிவு பகுதியைச் சேர்ந்த ராயப்பன்(51), தனது வாகனத்தை நேற்று வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். திரும்பி வந்தபோது வாகனம் காணவில்லை என தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.