கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் நேற்று(டிச.2) கவுண்டம்பாளையம் காவல்துறையினர், இடையார்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்த போது அங்கு ஜெயக்குமார் (36) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 10 பாக்கெட் புகையிலை பொட்டலங்கள், இதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம், மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.