கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி லிங்கம்மாள். இவர்கள் பட்டினத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நடத்தும் கட்டுமான நிறுவனத்தை அணுகி தங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க 33 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர்.
ஆனால் அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு கட்டுமான பணியை முழுமையாக முடித்துத் தரவில்லை என்று சொல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். நேற்று(டிச.3) மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு கட்டுமான நிறுவனத்தினர் திருமூர்த்தியின் குடும்பத்தாருக்கு 11 லட்சத்து 9 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு 10,000 ரூபாயும், கோர்ட்டுக்கு ஐந்தாயிரம் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.