கனமழையின்போது பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், "நிவாரண முகாம்களை அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கனமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும்" என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.