4 விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

76பார்த்தது
4 விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் சென்னை, திருச்சி, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயணித்த பயணிகளை விட 2024 ஆகஸ்ட் மாதம் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18, 53, 115 பயணிகள் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 17, 53, 115 பயணிகள் மட்டுமே பயணித்து உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை 90, 222 அதிகரித்துள்ளது. இது 5. 1% ஆகும். இதேபோல் கோவை விமான நிலையத்தில், பயணிகள் எண்ணிக்கை 16, 199 அதிகரித்துள்ளது. இது 6. 4% ஆகும். திருச்சி விமான நிலையத்தில் 17. 9%, தூத்துக்குடி விமான நிலையத்தில் 16. 4% பயணிகள் அதிகரித்துள்ளனர். ,

சேலம் விமான நிலையத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10, 994 பயணிகள் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலம் விமான நிலையம் செயல்படவில்லை. மேலும், தமிழ்நாட்டில் விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், சென்னை விமான நிலையத்தில், சர்வதேச முனையத்தில் மட்டும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது விமான நிலைய அதிகாரிகள் சென்னை சர்வதேச முனையத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4, 86, 177 பயணிகள் பயணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி