மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்குமத்திய அரசு 50 சதவீத நிதி பங்களிப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில், கடந்த 10 ஆண்டுகளில் நம்நாடு உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய மாற்றம் கண்டுள்ளது. உங்கள் தலைமையிலான மத்திய அரசு, மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நாட்டின் முக்கிய நகரங்களில் மக்களின் பொது போக்குவரத்தை மேம்படுத்தி உள்ளது.
சென்னையின் பொது போக்குவரத்தில் மகத்தான சாத்தியக்கூறுகளை கொண்ட மெட்ரோ ரயிலின்2-ம் கட்ட திட்டத்துக்கு, 2020-ம்ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். ஆனாலும், மத்திய அரசின் நிதி ஒப்புதலுக்கு முன்பாக, நிதி பங்கீடாஅல்லது மானியமா என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்பாக இந்த திட்டத்தை தமிழக அரசு மாநில அரசின் திட்டமாக தொடங்க முடிவு செய்தது.
மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கருத்தில்கொண்டு, சென்னைமெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கு 50 சதவீத நிதி பங்களிப்பு வழங்க பரிசீலிக்க வேண்டும் என்றுதமிழக பாஜக சார்பாகவும், தமிழகமக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.