அரசியல் ரீதியாக பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பத்திரம் மூலம் பாஜக பெருமளவு நன்கொடை பெற்றது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். தற்போது, கட்டாயப்படுத்தி தேர்தல் நன்கொடை பெற்றதாக நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மை வெளிவந்தே தீரும்.
வெறுப்பு அரசியலை மக்கள் வேடிக்கைப் பார்க்கமாட்டார்கள். இந்தியாவில் அரசியல் ரீதியாக பழிவாங்கும் போக்கை அனைத்து அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும். காமராஜர் ஆட்சிக் காலத்தில் இருந்த நாகரீகம் இப்போது வரவேண்டும். வாரிசு அரசியல் பற்றி பாஜகவினர் பேசக்கூடாது. பாஜக தலைவர்கள் 60 பேரின் வாரிசுகள் அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடக்கூடாது என செல்வப்பெருந்தகை கூறினார்.