தீமிதியின் போது தவறி விழுந்த பெண்: பத்திரமாக மீட்பு

51பார்த்தது
தீமிதியின் போது தவறி விழுந்த பெண்: பத்திரமாக மீட்பு
சென்னை, வியாசர்பாடி ஸ்ரீதீப்பாஞ்சம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழியில் தவறி விழுந்த பெண் காயம் அடைந்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் ஸ்ரீதீப்பாஞ்சம்மன் கோயில் இருக்கிறது. மிகப் பிரபலமான இந்த கோவிலில், ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நேற்று (செப் 29) நடைபெற்ற தீமிதி திருவிழாவில் வியாசர்பாடி மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில், தீ மிதிக்கும் போது ஒரு பெண் கால் தவறி தீக்குளிக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக அருகில் இருந்த தீயணைப்பு படையினர் அந்தப் பெண்ணை மீட்டனர். இதனால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தீக்காயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி