வணிக சிலிண்டர் விலை உயர்வு

83பார்த்தது
வணிக சிலிண்டர் விலை உயர்வு
19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ. 48 உயர்ந்தது. ரூ. 1, 903-க்கு விற்பனை செய்யப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் மாகத்தின் தொடக்க நாளன்று இந்தியாவில் வீட்டு பயன்பாடு, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதனடிப்படையில் இந்த மாதத்திற்கான மாற்றம் செய்யப்பட்ட விலை பட்டியில் இன்று (அக்.,1) அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 48 உயர்ந்து ரூ. 1903க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 818.5-க்கு என எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி