இந்திய விமானப்படை, அதன் 92வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், வரும் 6ம் தேதி காலை 11: 00 மணி முதல், சென்னை மெரினா கடற்கரையில், விமானங்கள் வாயிலாக பிரமாண்ட வான்வெளி சாகச நிகழ்ச்சி நடத்துகிறது. இந்திய விமானப்படையின் 72 வகை விமானங்கள், காண்போரை கவர்ந்திழுக்கும் ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட உள்ளது.
இதை காண, சென்னை மற்றும் மற்ற புறநகர் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு வசதியாக, பல வழித்தடங்களில் இருந்து மெரினாவுக்கு கூடுதல் பேருந்து இயக்கப்பட உள்ளது.