முல்லை பெரியாறு விவகாரம்: பழனிசாமிக்கு துரைமுருகன் பதில்

62பார்த்தது
முல்லை பெரியாறு விவகாரம்: பழனிசாமிக்கு துரைமுருகன் பதில்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் லாபத்துக்காக மக்களை அதிமுக குழப்ப வேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், முல்லை பெரியாறு அணை மற்றும் பேபி அணையை பலப்படுத்திய பிறகு அணை நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2006 பிப்ரவரி 27-ம்தேதி உத்தரவிட்டது.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பேபி அணையின் மீதமுள்ளபணிகளை முடிக்க அனுமதி அளிக்குமாறு கடிதங்கள், மேற்பார்வை குழு கூட்டங்கள் மூலமாக, கேரள அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. பலப்படுத்தும் மற்ற பணிகளை மேற்கொண்டு, அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. எனவே, அரசியல் லாபம் கருதி, அண்டை மாநில நதிநீர் பிரச்சினையில் வெற்று அறிக்கைகளை வெளியிட்டு, போராட்டங்களை அறிவிக்கும் அதிமுக, மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி