சென்னையில் வரும் அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; பொதுமக்கள் கவனத்திற்கு 02. 10. 2024 அன்று திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறவுள்ளது. அதில் திரளான பக்தர்கள் சுமார் (10000பேர்) கலந்து கொள்ள உள்ளனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்கண்ட இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.
காலை 6 மணி முதல் வாக்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என். எஸ். சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஒட்டிகள் ஈவேரா சாலை, ராஜாஜி சாலை, வாடஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
மாலை 3 மணி முதல் யானைக்கவுனி சாலையை கடக்கும் வரை வாக்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் மிண்ட் வழியாக பிரகாசம் சாலை, ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். ஈவேரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலையை பயன்படுத்தாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது சூளை ரவுண்டானாலிருந்து டெம்யஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.