அக். 3வது வாரத்தில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்

61பார்த்தது
அக். 3வது வாரத்தில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்கும் என்றும், தென் தமிழகத்தில் குறைவாகவும், வட தமிழகத்தில் அதிகமாகவும் பெய்யும் வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தற்போது கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பெய்து வரும் நிலையில் அக்டோபர் 20ம் தேதியில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அக்டோபர் 20ம் தேதி வழக்கமாக தொடங்கும் வட கிழக்கு பருவமழை முன்னதாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்டோபர் 3வது வாரம் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையத்தின் தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன், சென்னையில் நேற்று (அக் 1) அளித்த பேட்டி: தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து செப்டம்பர் 30ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 39 செமீ பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பாக மேற்கண்ட பகுதிகளில் 33 செமீ மழை பெய்யும். ஆனால் இப்போது 18 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி