மதுவிலக்கு அமலாக்கம்: 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது

62பார்த்தது
மதுவிலக்கு அமலாக்கம்: 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது
மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் துறையினருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக விழுப்புரம் மண்டலம், மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் பெ. சின்னகாமணன், விழுப்புரம் தாலுகா சட்டம் ஒழுங்கு காவல் நிலைய தலைமைக் காவலர் கி. மகாமார்க்ஸ், திருச்சி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலர் க. கார்த்திக், சேலம் மாவட்டம், ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்கள் கா. சிவா மற்றும் ப. பூமாலை ஆகியோருக்கு 2024-ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருது, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத் தொகையாக தலா ரூ. 40ஆயிரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி