மின்வாரிய முன்னெச்சரிக்கை பராமரிப்பு பணிகள்: அமைச்சர்

63பார்த்தது
மின்வாரிய முன்னெச்சரிக்கை பராமரிப்பு பணிகள்: அமைச்சர்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார்.

எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துதல் குறித்துகாணொலிக் காட்சி மூலமாக அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்காகவும் கடந்த ஜுலை 1-ம் தேதிமுதல் ஒருங்கிணைந்த பராமரிப்பு பணிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள், இன்றைய நிலவரப்படி 31, 328 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. சுமார் 1, 259 கி. மீ. தூரத்துக்கு மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 88 பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பராமரிப்பு பணிகளை ஒருமாத காலத்துக்குள் விரைந்து முடிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.