விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் சென்னை பெருநகரில் 16, 500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள், 2, 000 ஊர்க்காவல் படையினர் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், அயனாவரம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தேனாம்பேட்டை, தியாகராய நகர், கோயம்பேடு ஆகிய இடங்கள் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதே போல, அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர் கடலிலும், வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொடுங்கையூர் மற்றும் மாதவரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலிலும், திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் கடலில் கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.