சென்னை மாநகராட்சி சொத்து, தொழில் வரி ரூ. 1, 140 கோடி வசூல்

64பார்த்தது
சென்னை மாநகராட்சி சொத்து, தொழில் வரி ரூ. 1, 140 கோடி வசூல்
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 13 லட்சத்து 33 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு (ஏப்ரல் - செப்டம்பர்) நேற்றுடன் (செப் 30) நிறைவடைந்தது. இதில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, சொத்து வரி ரூ. 880 கோடி, தொழில் வரி ரூ. 260 கோடி என மொத்தம் ரூ. 1, 140 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 940 கோடி வசூலாகியுள்ளது. இந்த ஆண்டு ரூ. 100 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது. இது மாநகராட்சியின் வரி வரலாற்றில் புதிய உச்சம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ. 90 கோடி வசூலாகியுள்ளது.

கடந்த அரையாண்டில் சொத்து வரி ரூ. 850 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ. 30 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழில்வரி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ரூ. 15 கோடி குறைவாக வசூலாகியுள்ளது.

இன்று (அக் 1) முதல் அக். 30-ம் தேதி வரை நடப்பு அரையாண்டுக்கான (அக்டோபர் - மார்ச்) சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. முதல் அரையாண்டுக்கான சொத்து வரிக்கு மாதம் 1 சதவீதம் தனி வட்டி வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி