சென்னை மாநகராட்சி பணியாளர்கள் உடல் பரிசோதனை முகாம்

69பார்த்தது
சென்னை மாநகராட்சி பணியாளர்கள் உடல் பரிசோதனை முகாம்
சென்னையில் 11, 931 மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் நிதிநிலை அறிவிப்பில், மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாம், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று ( செப்டம்பர் 10) நடைபெற்றது. மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்து முகாமை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சியின் 4, 571 நிரந்தரப் பணியாளர்கள், 7, 360 தற்காலிகப் பணியாளர்கள் என மொத்தம் 11, 931 பேருக்கு இன்று முதல்கட்டமாக முழு உடல் பரிசோதனை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்தமாக 16 வகையானபரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி முழு சிறுநீர் பகுப்பாய்வு, ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை, கொழுப்பு பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு, இசிஜி, டிஜிட்டல் எக்ஸ்ரே, கண் காது பிரச்சினைகள் குறித்த பரிசோதனைகள், பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி