சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 குறைந்துள்ளது. நேற்றைய தினமும் சவரனுக்கு ரூ 120 குறைந்த நிலையில் கடந்த இரு நாட்களில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 360 குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை அக்டோபர் 1 ஆம் தேதி சவரனுக்கு ரூ 240 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 7050 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு சவரன் தங்கம் ரூ 56, 400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ 101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.