பாஜகவின் படம் ஃபிளாப்.. தேஜஸ்வி யாதவ்

51பார்த்தது
பாஜகவின் படம் ஃபிளாப்.. தேஜஸ்வி யாதவ்
பிகாரில் ஜமுய், நவாடா, கயா மற்றும் அவுரங்காபாத் ஆகிய 4 தொகுதிகளுக்கு நேற்று (19.04.2024) தேர்தல் நடைபெற்றது. இந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 48.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தேஜஸ்வி யாதவ் 400 இடங்கள் வெல்வோம் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின் போதே தோல்வி அடைந்து விட்டது என கூறியுள்ளார். மேலும், பீகார் மக்கள் இந்த முறை அதிர்ச்சி தரும் முடிவுகளைத் தருவார்கள். பீகார் மக்களுக்கு பாஜக எதுவும் செய்யவில்லை என அவர் கூறியுள்ளார்.