10 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நெருங்கி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகைக்கு 630 கி.மீ. தெற்கு - தென் கிழக்கிலும், இலங்கையின் திரிகோணமலைக்கு 340 கி.மீ. தெற்கு - தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 750 கி.மீ. தெற்கு - தென்கிழக்கிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதனிடையே அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 30 பேர் காரைக்கால் விரைந்துள்ளனர்.