கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில், திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் அங்கிருந்த நகராட்சி கவுன்சிலர் ஒருவரிடம் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தியாகு என்பவர் பணம் கேட்டு பெற்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி பணம் பெற்ற சிறப்பு உதவியாளர் சந்தியாக்குவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.