ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கீரனூர், சாவடிப்பாளையம் பகுதிகளில் தீவிரமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்விற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் NSN. நடராஜ் தலைமை தாங்கினார். வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசுகையில் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு பொதுமக்கள் நாள் குறித்து விட்டனர் என்றும், நமது அம்மா காலத்தில் செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டது, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பெண்கள் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது எனவும் குறிப்பிட்டார். மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மதுபான கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு மேலும் புதிய மதுபான கடைகளை திறந்து வைத்துள்ளனர். இப்போது புதிதாக குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய போதை பொருள்களை மிட்டாய்களில் கலந்து விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். திமுக அரசு மக்களின் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்தி வருகின்றனர். மேலும் இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், மறவா பாளையம் ஊராட்சி செயலாளர் பி. கே. பி சண்முகம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.