தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து சண்முக சிகாமணி நகர் 5-வது தெருவை சேர்ந்த மகாலிங்க மகன் சுந்தரம் (84). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் மந்திதோப்பு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். மந்தித்தோப்பு சாலை அண்ணாமலை நகர் அருகே சென்றபோது, நாய் ஒன்று குறுக்கே ஓடியதால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.