திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் சாமி தரிசனம் குடும்பத்துடன் செய்தார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் தனது மனைவி மற்றும் தாய்- தந்தையுடன் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். இவருக்கு திருக்கோயில் சார்பில் திருக்கோயில் இணை ஆணையர் /செயல் அலுவலர் ரமணி அறங்காவலர் வி. சுரேஷ்பாபு ஆகியோர் மலர்- மாலை மற்றும் பிரசாதங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் அவருக்கு வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்விற்கு முன்னதாக திருத்தணிக்கு வருகை தந்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் அவருக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.