நெல்லை: பாஜக மாவட்ட தலைவர் எச்சரிக்கை

70பார்த்தது
நெல்லை மாநகர நடுக்கல்லூர் காட்டுப்பகுதியில் நேற்று (டிசம்பர் 16) கேரளா மாநிலத்தின் மருந்து கழிவுகளை கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 17) திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் இது குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் இன்னும் இரண்டு நாட்களில் தமிழக அரசு இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த பேட்டியின்போது பாஜகவினர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி