பூதலூர் வட்டாரத்தில் விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம் நடைபெற்று வருகிறது. பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செய்தி குறிப்பு:
பூதலூர் வட்டாரத்தில் உள்ள 52 வருவாய் கிராமங்களிலும் தங்கள் நில உடமை பதிவுகளை சரிபார்க்கும் முகாம் வேளாண்மை துறை மற்றும் சகோதர துறை அதிகாரிகள், மகளிர் திட்ட சமூக வள பயிற்றுநர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. அனைத்து விவசாயிகளும் தங்களை தவறாமல் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அனைவரும் தங்கள் பெயரில் உள்ள நில ஆவணங்கள், ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி போன்ற ஆவணங்களை முகாமிற்கு எடுத்துச் சென்று பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு ஆதார் அட்டை எண் போன்ற விவசாய அடையாள எண் அட்டை வருங்காலங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.