செங்கமங்கலம் அரசுப் பள்ளியில் மென் திறன் மேம்பாட்டு பயிற்சி

77பார்த்தது
செங்கமங்கலம் அரசுப் பள்ளியில் மென் திறன் மேம்பாட்டு பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில், இரண்டு நாள் மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

தன்னை அறிதல், தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளுதல், நேர்மையான வாழ்வியலை வழக்கமாக்கி கொள்ளுதல், நேர மேலாண்மை, இடர் தாண்டுதல், கூட்டு உழைப்பு, வலிமை அறிதல் போன்ற தலைப்புகளில்  பயிற்றுனர் இளங்கோ முத்து பயிற்சி வழங்கினார்.    


இந்தப் பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு  படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இந்தப் பயிற்சியை பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் சிலம்பரசன் தொடங்கி வைத்தார்.
அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா. வெங்கடேசன் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கம் அளித்தார்.  

முன்னதாக அறக்கட்டளை ஆசிரியர் ஆர்த்தி வரவேற்றார்‌.   பள்ளியின் ஆசிரியர்கள் ராஜேந்திர குமார், சுகந்தி, நிரஞ்சனா தேவி, ஆனந்தி, உதய ரேகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களுக்கு பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.  
நிறைவாக ஆசிரியர்  ஜான்சிராணி நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you