மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் - ஈரான் நாடுகள் இடையே நடக்கும் யுத்தம் காரணமாக பதற்ற சூழ்நிலை அதிகரித்துள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இது ஈரானின் எண்ணெய் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 73 டாலரில் இருந்து 90 டாலர் வரை அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் பெட்ரோல்-டீசல் விலையும் உலகளவில் உயர வாய்ப்புள்ளது.