சுவாமி விவேகானந்தரின் 162வது ஜயந்தி விழா வருகிற ஜனவரி 12ம் தேதி நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட உள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை எடுத்துரைத்த பன்முகத்தன்மை கொண்ட மகான் சுவாமி விவேகானந்தரின் ஜயந்தி விழா அன்று இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அன்று ஒரு நாள் மதுக்கடைக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசை வலியுறுத்தி சார் ஆட்சியர் வாயிலாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
இதில் கூறியுள்ளதாவது தமிழக அரசு திருவள்ளுவர் தினம், மிலாடு நபி ஜயந்தி, காந்தி ஜயந்தி, மகாவீர் ஜயந்தி, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், வள்ளலார் தினம் போன்ற தினங்களுக்கு விடுமுறை அளித்து கௌரவிக்கின்ற தமிழக அரசு சுவாமி விவேகானந்தரின் ஜயந்தி அன்றும் மதுக்கடைக்கு விடுமுறை அளித்து கௌரவிக்க வேண்டும்.
அதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில் இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா, மாவட்ட அமைப்பாளர் அரவிந்த், நகரத் தலைவர் பிரபாகரன், பூசாரி பேரவை மாவட்ட தலைவர் கார்த்தி, சிவசேனா மாநில அமைப்பாளர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.