தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க முடியாது: அமைச்சர் ரகுபதி

73பார்த்தது
தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க முடியாது: அமைச்சர் ரகுபதி
அமைதிப் பூங்காவாக இருப்பதால்தான், தொழில் செய்வதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ரகுபதி, “தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கொலைகள் அரசாங்கத்தால் ஏற்பட்டது கிடையாது. ஒருவருக்கொருவர் மீது உள்ள போட்டியால் கொலைகள் நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க முடியாது" என்று கூறியுள்ளார்.