திருப்பத்தூர் - Tiruppattur

சிவகங்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முக்கிய தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் கன மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் தொடர்ந்து சிக்கலுக்கு உள்ளாவதால் அதிக மழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் இடங்களில் அந்தந்த தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என இன்று (நவம்பர் 8) காலை 9 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

வீடியோஸ்


சிவகங்கை
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு
Nov 09, 2024, 05:11 IST/

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு

Nov 09, 2024, 05:11 IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது X தள பக்கத்தில், " 'பொலந்தொடி தின்ற மயிர் வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து' (நெடுநல்வாடை- 141). பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக, வெம்பக்கோட்டை அகழாய்வில், 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.