மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்னலக்குடி பகுதியில் பைபாஸ் சாலைக்கான மேம்பால பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் நிலையில் தற்போது அந்த மேம்பால பணிகள் தாமதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லாமல் மாற்று வழியில் செல்வதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.