காஞ்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேருக்கு 'காப்பு'

71பார்த்தது
காஞ்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேருக்கு 'காப்பு'
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அடுத்த கன்னிராஜாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ், 24. மாம்பாக்கம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 15ம் தேதி இரவு 8:15 மணிக்கு, சென்னை - பெங்களூரு சாலையில், பேருந்தில் செல்வதற்காக மொளச்சூர் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் கொண்ட கும்பல், அவரது மொபைலை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், எச்சூர் கிராமத்தைச் சேர்ந்த அஜய் (21), திருமழிசையைச் சேர்ந்த கவுதம் (24), கள்ளகுறிச்சியைச் சேர்ந்த சேட்டு (18) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி